சன் மியூசிக் இல் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சனா ரங்கன். இவர் நடிகைகளுக்கு இணையான ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். தற்போது TV நிகழ்ச்சிகளை விட அவர் விருது விழாக்கள் மற்றும் பட விழாக்களை தான் அவர் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.
36 வயதாகியும், குறையாத அழகுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் அஞ்சனா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அஞ்சனா கயல் பட புகழ் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், அஞ்சனா அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட அதைப் பற்றி ரசிகர்கள் அஞ்சனாவிடமே கேட்க தொடங்கிவிட்டனர். அதற்கு காட்டமான பதில் அளித்த அஞ்சனா, எவனோ ஒருத்தன் போஸ்ட் போட்டால் உடனே வந்துடுவீங்களா? என்னை டேக் பண்ணிட்டு என பதிவிட்டார்.

இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஞ்சனா. இருப்பினும், அந்த பதிவை அஞ்சனா சற்று நேரத்தில் நீக்கிவிட்டார். கோபத்தில், அப்படி பதிவிட்டதாக தெரிவித்து இன்னொரு பதிவையும் அவர் போட்டிருக்கிறார்.


