திண்டுக்கல் N.G.O காலனியில் பகுதியில் அதிமுக, பாஜக, பாமக பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி கட்சிக்கு பயந்து தான் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் ₹5000 அறிவித்துள்ளார்.
₹ 2000 திட்டம் எடப்பாடியாருக்கு பிறந்த குழந்தை. அவருக்கு பிறந்த குழந்தைக்கு இவர் பெயர் வைக்கிறார். அறிவித்த திட்டத்தை தேர்தல் முடிந்து இரண்டு நாட்களில் நிறுத்தி விடுவார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கூடிய வாக்குறுதிகள் கூட்டணியின் சார்பில் வரும். அமித்ஷா நரேந்திர மோடி தொடர் வருகை பீகார் வெற்றியைப் போல 100க்கு 100 வெற்றியாக வரும் என தெரிவித்தார்.

