சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களின் மூலம் எத்தனையோ கலைஞர்கள் தங்களது வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளை கண்டுள்ளனர். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு புகழ் கிடைத்தது என்றே சொல்லலாம்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லாததால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலாச்சார சீர்கேடு என்றெல்லாம் கருத்துக்களை பரப்பி விட்டனர். தற்போது, இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் நன்றாகவே தெரிந்து கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நன்கு விளையாடினால், மக்களிடம் ரீச் ஆகலாம் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.

அப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்த தாமரை செல்வி மக்களுக்கு பரிச்சயம் ஆனார். 20 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுப்புற கலைஞராக இருந்த அவருக்கு பிக் பாஸ் பெரிய எதிர்காலத்தை தேடி கொடுத்தது என்று சொல்லலாம். சீரியல்களில் நடித்து வந்த தாமரை இப்பொழுது முதன்முறையாக சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அதுவும், டாப் நடிகருக்கு மனைவியாக நடித்துள்ளார். இயக்குனர் மாதவ் ரமாதாசன், சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி என பலரை வைத்து ‘ஆளி‘ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில், நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு ஜோடியாக தாமரை செல்வி நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

