கோவை தெற்கு தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று எம்.எல்.ஏ வாக உள்ளவர் வானதி சீனிவாசன். சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன் வானதிக்கு எதிராக போட்டியிட்டு வெறும் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் வரும் 2026 தேர்தலில் வடக்கு தொகுதியில் போட்டியிட வானதி சீனிவாசன் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. வடக்கு தொகுதியில் தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அம்மன் கே அர்ஜுனன் உள்ளார்.

இந்த முறை தெற்கு தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தியை களமிறக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
