தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகமாக உயரிய மரியாதை வைத்துள்ள ஒரு நபர் தான் டி ராஜேந்தர். எளிமையான நடிப்பு, நடிகைகளை தொடாமல் நடிப்பதில் வல்லவர்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட டி ராஜேந்தர், 80 களில் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.
அவர் இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி நாளை வெளியாக உள்ளது.
இவர் உடன் நடித்த நடிகை உஷாவை திருமணம் செய்து கொண்டார். உயிருள்ளவரை உஷா திரைப்படத்தை இயக்கும் போது தான் திருமணம் ஆகியிருந்தது. அந்த சமயம் உஷா, ராஜேந்தரை விட்டு பிரிந்து அமெரிக்க சென்றிருந்தார்.

அவரை நினைத்து போட்ட பாடல்தான், கங்கரை கரை காற்றே நில்லு, வஞ்சி தனை பார்த்தால் சொல்லு. டியூன் போட்டு, பாடலை எழுதி கேஜே யேசுதாஸை பாட சொல்லியுள்ளார்.

அவரும் உணர்வுப்பூர்வமாக பாட, பாட்டு இப்போது வரைக்கும் செம ஹிட் ஆகியுள்ளார். இது டி ராஜேந்தரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

