ரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். அவர்களின் விவாகரத்து பிரிவுக்கு பலரும் பல காரணங்களை சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்கள் எதுவும் ரியாக்ட் செய்யாமல் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற அறிமுகத்துடன் சௌந்தர்யா ரஜினிகாந்தின் திரைப்பயணம் தொடங்கியது. இரண்டாவது மகள் சௌந்தர்யா முதலில் ஒரு திருமணம் செய்தார். அந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தார். ஆனால், சில பல காரணங்களால் முதல் கணவரை சௌந்தர்யா பிரிந்தார்.

இதை அடுத்து, நடிகர் விசாகனை காதலித்து இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார். இரண்டாவது திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில், அவர் எங்கள் திருமணத்தின் முகூர்த்த நேரம் நெருங்கியது அப்போது என்னுடைய மகன் வேத் கிருஷ்ணா அங்கு இல்லை. உடனே நான் எனது அக்கா ஐஸ்வர்யாவிடம் வேத் இன்னும் வரவில்லை என கேட்டேன். அப்போது, விசாகன் என்னை பார்த்து வேத் வரும் வரை நான் தாலி கட்ட மாட்டேன் என்று கூறி பிறகு வேத் வந்த பிறகுதான் அவர் என் கழுத்தில் தாலி கட்டினார்.

ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளுக்கு எல்லாமே புரியும், பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ முடியாது. அவர்கள் அதனை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். விசாகன் எனது கழுத்தில் தாலி கட்டியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள படம் வித் லவ் இப்படத்தை அறிமுக இயக்குனர் மதன் இயக்க இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினரை அனைவரும் அழைத்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

