Close Menu
    What's Hot

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»ஆதரவு கொடுக்க வந்த நயினாரிடம் அங்கன்வாடி ஊழியர்கள் கேட்ட கேள்வி.. போராட்டத்தில் சலசலப்பு!
    தமிழ்நாடு

    ஆதரவு கொடுக்க வந்த நயினாரிடம் அங்கன்வாடி ஊழியர்கள் கேட்ட கேள்வி.. போராட்டத்தில் சலசலப்பு!

    Prime ReporterBy Prime ReporterFebruary 12, 2026Updated:February 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Anganwadi workers asked a question to Nainaar who came to offer support
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பத்தாவது நாளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாள்தோறும் அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பத்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

    அப்போது அவர்கள் நயினார் நாகேந்திரனிடம் தங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குவதாகவும், அப்படி இருக்கும் பொழுது மாநில அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் மத்திய அரசாவது எங்களது கோரிக்கைகளை ஏற்று நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசிடம் கேளுங்கள் எனக் கூறுகிறார்கள் மத்திய அரசிடம் கேட்டால் மாநில அரசிடம் கேளுங்கள் என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்த அங்கன்வாடி ஊழியர்கள் இப்படி இரண்டு அரசுகளும் தங்களை அலைக்கழித்தால் நாங்கள் எங்கு செல்வது என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் உங்களுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக அரசு தான் அவர்களிடம் தான் நீங்கள் முறையிட வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் நாங்கள் இதர அரசியல்வாதிகள் போன்று இல்லை நாங்கள் சொன்னதை செய்வோம் எனவும் கூறினார். மேலும் இது குறித்து வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பேசுகிறோம் எனவும் பதிலளித்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்கள் இது குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பிய நிலையில் பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Anganwadi Protest Coimbatore Coimbatore News DMK Nainar Nagendran Politics அங்கன்வாடி ஊழியர்கள் அரசியல் கோவை நயினார் நாகேந்திரன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    கோவை அருகே 20 நாட்களாக சுற்றும் சிறுத்தை… வீடியோ போட்டு அறிவுறுத்திய அண்ணாமலை!

    April 3, 2026

    திரும்பத் திரும்ப பொய் சொல்றீங்க முதல்வரே.. அபத்தமான அவதூறு.. நயினார் கண்டனம்!

    April 2, 2026

    நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு!

    April 2, 2026

    கேப்டன் குறித்து சந்தர்ப்பவாத பேச்சு… பியூஷ் கோயலுக்கு எல்.கே சுதீஷ் கண்டனம்!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    அதிகப்பிரசங்கி போல செயல்பட்ட பாஜக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்க அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து…

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.