சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முற்றுகை போராட்டம் நடந்தது.
இதில் அச்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது என்னையும் கைது செய்யுங்கள் என சீமான் வேனில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது போலீசார் சீமானையும் கைது செய்தனர், பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

