தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்றும், திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேசியிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், மக்கள் முடிவு செய்வார்கள்.. கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை.. 2006ல் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் செய்த தவறு என பதிவிட்டுள்ளார்.

