டிரெண்டிங் இசையமைப்பாளர் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இந்தியா முழுவதும் இவரது இசைக்கு ரசிகர்கள் உண்டு.
3 படத்தில் தொடங்கிய பயணம், ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான் என பான் இந்தியா இசையமைப்பாளராக உருவாகியுள்ளளார்.
கோடியாக கோடியாக சம்பளம் வாங்கினாலும் சந்தோஷம் இல்லை என அனிருத் பேசியுள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சிறு வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும் போது ரூ.500 கொடுப்பார்கள். அதில் இருக்கும் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை, சில நிகழ்ச்சிகளில் சம்பளம் தராமல், வெற்றிலை பாக்குடன் முடித்துவிடுவர்.
ஆனால் இப்போது கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும், சிறு வயது சந்தோஷம் இப்போது இல்லை என ஓபனாக பேசியுள்ளார்.

