watermelonஐ வைத்து ஸ்டாராக உருவான திவாகரை கொஞ்சம் பேருக்குதான் தெரியும் என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பின் பிரபலமாக மாறிவிட்டார்.
பிக்பாஸ் சீசனுக்கு பின் திவாகர் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல அவமானங்கள், கேலி, கிண்டல்களுக்கு அப்பறமாக எனக்கு ஹீரோவா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.

நடிப்பு அரக்கனை நீங்கள் வெள்ளித்திரையில் பார்க்க போறீங்க, எனக்கு வரப் போகிற மனைவி திரிஷா, சமந்தா போல இருக்க வேண்டும் என கூறினார். அப்போது செய்தியாளர் குறுக்கிட்டு, திரிஷாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூற, அதற்கு பதிலளித்த திவாகர், நான் அவங்களை விட சின்ன பையன் என கூறினார்.
மேலும் என் வயதை பற்றி சிலர் தவறாக எழுதுகிறார்கள், என்னுடைய பிறந்த வருடம் 1988 என்று அப்போது அவர் கூறினார்.
