காதல், அதிரடி படங்களை கொடுத்து வந்த கவுதம் வாசுதேவ் மேனன் புதிய பாதையை தேர்வு செய்துள்ளார்.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகிறார் கவுதம் மேனன். திரைத்துறையில் 25 ஆண்டுகளை கவுதம் மேனன் நிறைவு செய்துள்ளார்.
தொடர்ச்சியாக நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பிஸியாக இருக்கும் கவுதம் மேனன், அடுத்ததாக ஒரு புத்தம் புதிய கதையை கொண்டு படத்தை இயக்க உள்ளார்,.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், அடுத்த படம் காதல் கதையை மையமாக வைத்து எடுக்க உள்ளேன். பெரிய ஹீரோக்கள் காதல் கதைகளில் நடிக்க தயாராக இல்லாததால், நான் இளம் நடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

புதிய நடிகர் ஒருவரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளேன், நானும் சிம்பு கூட நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் ஆக்ஷன் குறைவு என்பதால், வெந்து தணிந்தது காடு படத்தை எடுத்தோம்.
இப்போது GENZ காதல் வித்தியாசமானது என கூறுகிறார்கள், ஆனால் காதலின் மொழி மாறிவிட்டது என்று நான் நினைக்கவில்லை, நான் எடுக்கும் காதல் கதை, நாயகன் நாயகி இடையேயான ஒரு தூய்மையான நாடகம் என கூறியுள்ளார்,.

