இரவில் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என விஜய் பட நடிகை கதறி அழுத வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹோம்லியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூமிகா. விஜய், சூர்யா, ஸ்ரீகாந்த் என பலருடன் தமிழில் நடித்திருந்த பூமிகா, தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வரும் அவர், யுபோரியா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் விழா ஐதராபாத்தில் நடந்த போது, பங்கேற்க வந்த பூமிகா அழத் தொடங்கிவிட்டார்.

யுபோரியா பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சம்மந்தப்பட்ட உண்மைக் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து பேசத் தொடங்கிய பூமிகா கதறி அழுதார்.
படப்பிடிப்பு தொடங்கியது முதல் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, நள்ளிரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறேன் என அழுதார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

