தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சேலம் கோட்டை பகுதியில் உள்ள தோக் சால் திருமண மண்டபத்தின் செயலாளரான திரு. நௌமான் என்பவரை, கோட்டை பகுதி திமுக செயலாளர் இப்ராஹிம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சியளிக்கிறது.
திமுகவினர் ரவுடித்தனம் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்கு, தமிழகம் முழுவதுமே மோசமான சூழலில் இருக்கிறது. ரவுடித்தனம் செய்தால், நாளை திமுகவில் அமைச்சராக்குவார்கள் என்ற எண்ணத்தில், திமுக நிர்வாகிகள் அனைவருமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சேலம் கோட்டை பகுதியில் உள்ள தோக் சால் திருமண மண்டபத்தின் செயலாளரான திரு. நௌமான் என்பவரை, கோட்டை பகுதி திமுக செயலாளர் இப்ராஹிம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய காணொளி அதிர்ச்சியளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) February 6, 2026
திமுகவினர் ரவுடித்தனம் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்கு,… pic.twitter.com/q6SRV3t3ju
இவர்களின் கொட்டம் இன்னும் இரண்டு மாதங்களில், தமிழக மக்களால் நிரந்தரமாக அடக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

