நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளவர். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை வைத்துள்ளவர்.
கடைசியாக இட்லி கடை படத்தை இயக்கியிருந்த தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி படத்தில் இணைந்துள்ளார். அமரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த அவர் தற்போது தனுஷ் உடன் இணைந்துள்ளளார்.
இந்த படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி என முக்கிய நடிகைகள் இணைந்த நிலையல், மெகா ஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரர்ததில் நடிக்க உள்ளார்.

இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷ் 55வது படத்தின் நடிகர் நடிகைகள் இணைந்துள்ள நிலையில், 7 வருடம் கழித்து மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி தமிழ் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

