தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் ஒரு வாரத்தில் இணையும் என நேற்றுதான் கூறியிருந்தேன். அதற்கு இன்னும் ஏழு நாட்கள் உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியை டப்பா எஞ்சின் என முதலமைச்சர் கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின்பு எது மக்கரான என்ஜின் எது டப்பா எஞ்சின் எது வந்தே பாரத் இன்ஜின் என்பது அனைவருக்கும் தெரியும்.

திரைப்பட தணிக்கை குழு சுதந்திரமான அமைப்பு. ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மட்டும் தான் அதற்கு ஏன் தணிக்கை சான்றிதழ் தரவில்லை என்பது தெரியும். அந்த படத்திற்கு மட்டும் ஏன் அனைவரும் விளம்பரம் தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
த.வெ.க ஆட்சி அமைத்தால் ஊழலற்ற ஆட்சியை தரும் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு உங்களுக்கே இந்த கேள்வி நகைச்சுவையாக இல்லையா என பதில் அளித்தார்

