நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றியும், திருப்புமுனையாக அமைந்த படம் இது. வெங்கட்பிரபு இயக்கத்தில், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ரீ ரிலீசாகியது. பெரும் வரவேற்பை கொடுத்த அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் கொண்டாட, விஜய் ரசிகர்களும் மங்காத்தா ரீ ரிலீசை வரவேற்று பேனர் வைத்துள்ளனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தியேட்டர் வளாகத்தில் தவெக நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் மங்காத்தா படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்துள்ளனர்.
இதற்கு அஜித் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பட்டாசு வெடித்தும், டிஜே ஒலித்து மங்காத்தா படத்தை நடனமாடி கொண்டாடினர்.

