நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு எதிராக கோவையில் கடந்த 2013 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது குனியமுத்துரை சேர்ந்த வளையல் ஹக்கீம் என்பவரது வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக காவல் துறையினர் வளையல் ஹக்கீம், திருநெல்வேலி சேர்ந்த கிச்சன் புகாரி, தென்காசியை சேர்ந்த சையது சுலைமான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் கைதான மூன்று பேரும் மற்றொரு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பெட்ரோல் குண்டு பறிமுதல் வழக்கு கோவை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பெங்களூரில் இருந்து வளையல் ஹக்கீம், கிச்சன் புகாரி, சையது சுலைமான் ஆகிய மூன்று பேரை பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மினோ அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

