இயக்குநர் அட்லீ ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே பயங்கர ஹிட் அடித்தது. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பும், ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு பலம் சேர்த்தது.
பின்னர், தனது ஆஸ்தான நடிகரான விஜய்யை வைத்து, தெறி படம் எடுத்தார். அந்த படமும் பயங்கர ஹிட் அடித்தது. இதனால் இந்த கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைந்தது.
தெறி, பிகில், மெர்சல் என மூன்று படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால், அட்லீ இந்திய சினிமாவால் கவனிக்கப்பட்டார். இதையடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து எடுத்த ஜவான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, 1000 கோடி வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இதனால் அட்லீ மார்க்கெட் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் அட்லீ, சக நடிகை பிரியாவை காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு 9 வருடம் கழித்தே குழந்தை பிறந்தது. தற்போது 2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக அட்லீ – பிரியா தம்பதி அறிவித்துள்ளனர். க்யூட்டான போட்டோஷூட்டுகளை வெளியிட்டுள்ளனர். இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

