பராசக்தி திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் ரசிகர்களை மறைமுகமாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் பதிவாகி வருகின்றன.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான பராசக்தி திரைப்படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றும், வசூல் ரீதியாகவும் பெரிய சாதனையை படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய சுதா கொங்கரா, திட்டமிட்டு தாக்கும் விமர்சனங்கள் விஜய் ரசிகர்களிடமிருந்து வருவதாக தெரிவித்தார். இதனை அவர் ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனம் என வர்ணித்ததுடன், இன்றைய தமிழ் சினிமா கோமாளி ரசிகர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துகள் விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

