தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமான மாநகரம் வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இரண்டாவது படமாக வெளியான கைதியும் அதேபோலத்தான். கைதி மூலம் இந்தியா முழுதும் பிரபலமானவராக மாறிய இயக்குநர் லோகேஷ், அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார்.
கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தை உருவாக்கி இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து அசத்தினார். லியோவுக்கு பிறகு ரஜினிகாந்த்தை வைத்து கூலி படம் இயக்கியிருந்தார்.
Blessed with the best @alluarjun #AALoki
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026
Looking forward to kicking off this journey with you sir 🤗
Let's make it a massive blast 💥💥💥
Once again with my brother @anirudhofficial 💥💥#AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t
சில படங்களை தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டி வந்த நிலையில, லோகேஷ் இயக்கும் 7வது படத்தில் இணைந்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன். புஷ்பா 2 தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இது குறித்து படக்குழு வெளியிட்ட பிரோமோ வரவேற்பை பெற்றுள்ளது.

