Close Menu
    What's Hot

    காஞ்சீபுரம் IIITD&M மற்றும் முன்னணி வங்கிகளில் அதிரடி அறிவிப்பு!

    April 9, 2026

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026

    2026-27 கல்வி ஆண்டு: ஐஐடி மெட்ராஸ் & தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிரடி!

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»அரசு மருத்துவமனையில் இளைஞர் கொலை.. திமுக அரசு மீது அன்புமணி காட்டம்!
    தமிழ்நாடு

    அரசு மருத்துவமனையில் இளைஞர் கொலை.. திமுக அரசு மீது அன்புமணி காட்டம்!

    Prime ReporterBy Prime ReporterJanuary 12, 2026Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Murder of a young man in a government hospital.. Anbumani's anger against the DMK government!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    உயிர்காக்கும் மருத்துவமனைகளைக் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக இன்று அதிகாலை மருத்துவமனைக்கு வந்த ஆதி என்ற இளைஞரை, தலைக்கவசம் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் மகப்பேறு பிரிவுக்குள் புகுந்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. இந்தக் கொலையை செய்த கூலிப்படையினரை காவல்துறையினரால் இது வரை கைது செய்ய முடியவில்லை.

    Murder of a young man in a government hospital.. Anbumani's anger against the DMK government!

    கொலை செய்யப்பட்ட ஆதி மீது கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பின்னணி கொண்டவர்கள் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அவர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

    ஆயிரக்கணக்கான நோயர்கள் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், கூலிப்படையினர் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்குள் நுழைந்து கொடூரக் கொலையை நிகழ்த்தியிருக்க முடியாது. கொலையாளிகள் தப்பி ஓடியதைக் கூட காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளை கண்காணித்தல், மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளித்தல் என இரு அடிப்படை பணிகளிலுமே காவல்துறை தோல்வி அடைந்து விட்டது.

    கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக் குத்து, தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை என புனிதமாக மதிக்கப்பட வேண்டிய இடங்களில் கூட படுகொலைகள் நிகழும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருக்கிறது. கொலை நடக்காத நாள்களே இல்லை என்ற நிலை மாறி ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 கொலைகள் நடக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்லைத்திருக்கிறது.

    தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒரே வழி திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவது தான். பாதுகாப்பான தமிழகம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து திமுகவை விரட்டியடிப்பார்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK PMK Politics அன்புமணி திமுக அரசு பாமக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்.. விஜய்யின் அதிரடி அரசியல் அட்டாக்..!

    April 8, 2026

    திட்டமிடப்பட்ட சதியா?.. மனைவி சங்கீதா தொடர்பான சர்ச்சைகளுக்கு விஜய் பதில்..!

    April 8, 2026

    இந்தியாவின் ‘சூரியன்’ கல்பாக்கத்தில் உதித்தது: 20 ஆண்டுகால கனவு நனவான தருணம்!

    April 7, 2026

    பரப்புரைக்கு வராத விஜய்.. ஆர்.கே.நகர் பாணியில் வித்தை செய்த TVK வேட்பாளர்..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    குழந்தைகளுக்கு வங்கி கணக்கு இல்லாமலேயே ‘UPI’! – வதந்திகளும் உண்மைகளும்!

    April 9, 2026

    6 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கும் இந்தியா!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026
    Don't Miss

    காஞ்சீபுரம் IIITD&M மற்றும் முன்னணி வங்கிகளில் அதிரடி அறிவிப்பு!

    April 9, 2026

    காஞ்சீபுரம் IIITD&M நிறுவனத்தில் இயக்குனர் பதவி மற்றும் இந்தியன் வங்கி, IDBI வங்கிகளில் உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026

    2026-27 கல்வி ஆண்டு: ஐஐடி மெட்ராஸ் & தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிரடி!

    April 9, 2026

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.