சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் கூறியதாவது:
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது பொய்யான தகவல். ‘முழு பூசணியை சோற்றில் மறைப்பது’ என்ற பழமொழியைக்கூட விடாமல், தி.மு.க. அரசு ‘முழு பாறாங்கல்லையே சோற்றில் மறைக்க’ முயற்சிக்கிறது. இவ்வாறு மக்களை இன்னும் எத்தனை காலம் ஏமாற்ற முடியும் என்பதே கேள்வி; தி.மு.க. அரசு விரைவில் தூக்கி எறியப்படும் என்றார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தின் போது சம்பவ இடத்திற்குச் செல்லாத முதலமைச்சர், தேர்தல் நேரங்களில் மட்டும் அங்கு செல்வது கண்டிக்கத்தக்கது என்றும், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் புகைப்படப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் விமர்சித்தார்.
அதேபோல், திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

