கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு அப்பொழுது பேசிய அவர், இப்போது அலை மோதுகின்ற கூட்டம் 1972ல் புரட்சித் தலைவரை பார்த்தது போல 1988 இல் அம்மாவை பார்த்தது போல இன்னொரு மாற்றம் தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது
இந்த மாற்றம் எதிர்காலத்தில் தமிழகத்தின் வரலாற்றில் அவர் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆக அமருவதை மக்கள் சக்தியோடு இணைந்து அந்த பணிகள் நிறைவேறும் என்பதை வாழ்த்துக்களோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல இடங்களில் இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது இதுவரையிலும் அந்த கருத்துக்களை பொருத்தவரையில் என்னை போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை.
ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லுகிறார்கள் அப்படி என்றால் நாங்கள் சொல்ல வேண்டுமென்றால் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்த சீமான் அங்கே விருந்து உண்டு விட்டு பரிசு பொருட்களை வாங்கி வந்த காலம் இருக்கிறது. அதை மறந்து விடக்கூடாது.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கருத்து இன்னமும் எங்களின் கவனத்திற்கு வரவில்லை கவனத்திற்கு வந்தால் தான் அதற்கு பதில் அளிக்க முடியும். பொதுவாக ஒரு புதிய இயக்கம் துவங்கியிருக்கின்றது.
ஒரு வரலாறு படைக்கின்ற இயக்கம் மக்கள் கோரிக்கை வைக்கின்ற போது அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை அந்த பணிகளை ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டி இருக்கின்றது. பொறுத்திருந்து பாருங்கள்.
எங்களை பொறுத்தவரை தெளிவாக இருக்கின்றோம். இவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிறவர்கள் மட்டும்தான் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடியும்.
திருமாவளவன் கருத்துவேறு அவருடைய கருத்துக்களை கேட்கின்ற போது இதே திராவிட முன்னேற்ற கழகம் வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை திருமாவளவன் தான் விளக்க வேண்டும்.

பொறுத்து இருங்கள் விரைவில் ஜனவரி முதல் வாரத்திற்குள் அத்தனையும் தெரியும். எல்லோரும் வாழ வேண்டும் எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம், எங்களைப் பொறுத்த வரைக்கும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட போது இரண்டே கருத்துக்கள் பரிமாறப்பட்டது. அங்கே இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்களும் அதற்கு கோஷம் அளித்தார்கள். கொள்கை ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். யாரை அப்படி என்று கேட்டார் தெளிவாக மக்கள் சொன்னார்கள் மக்கள் உணர்வை தான் அவர் பிரதிபலிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

