திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிர் மேற்கு மண்டல அணி சார்பில் நடைபெறும் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
கோவை வந்த முதல்வருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாநகர காவல் ஆணையர் கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் கோவை மேற்கு மண்டல ஐஜி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை சார்ந்த திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி மேற்கு மண்டல திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை சளைகளில் இரு புறமும் தொண்டர்கள் மற்றும் மக்களும் தமிழக முதல்வருக்கு மேளதளங்களுடன் உற்சாக வரையிற்பனைக்கப்பட்டது.

இன்று மாலை பல்லடத்தில் நடைபெறும் மேற்கு மண்டல மகளிர் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிலையில் முன்னதாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார். பின்பு மாலை பல்லடம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாலை மார்க்கமாக செல்ல உள்ளார்.

