நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ள நிலையில், ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என கூறியுள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 3வது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. அதே சமயம் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அந்நாட்டு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ரசிகர்கள் மலேசியா செல்ல ஆயத்தாமாகியுள்ளனர்.
Thalapathy Fans take over MALAYSIA 😎🔥#JanaNayaganAudioLaunch
— Harish N S (@Harish_NS149) December 26, 2025
pic.twitter.com/fmvb1AMt0K
இந்நிலையில் மலேசியா செல்ல விஜய் ரசிகர்கள் பன்னாட்டு விமான நிலையங்களில் காலை முதலே திரண்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நடிகர் விஜய் மலேசியா புறப்பட வருகை தந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
EXCLUSIVE : Thalapathy At Chennai Airport ✈️ #JanaNayagan#JanaNayaganAudioLaunch
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) December 26, 2025
pic.twitter.com/FSqQ39vRLk
அதே போல மலேசியா செல்ல விஜய் ரசிகர்களும் சென்னை ஏர்போர்ட்டில் குவிந்துள்ளதால் விமான நிலையமே ஸ்தம்பித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

