பாமகவில் சமீப காலமாக தந்தை மகன் மோதல் அதிகரித்து வருகிறது. பாமகவில் கௌரவ தலைவராக உள்ளவர் ஜிகே மணி. இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த நிலையில் ஜிகே மணியை கட்சியை விட்டு நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார். முன்னதாக அன்புமணி கூறும் போது, தந்தை மகன் மோதலுக்கு காரணம் ஜிகே மணி தான் என்றும், தனக்கு மத்திய அமைச்சராக வாய்ப்பு கிடைத்ததை ஜிகே மணி தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜிகே மணி, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்குவதை ராமதாஸ் எதிர்த்தார். ஆனால் அன்புமணிக்கு நான் உறுதுணையாக இருந்தேன். மேலவை உறுப்பினராக எனக்கு கிடைத்த வாய்ப்பை அன்புமணிக்காக விட்டு கொடுத்தேன். ஆனால் தற்போது அவர் என்னை விமர்சிப்பது வருத்ததமாக உள்ளதாக கூறினார்.

இதனிடையே பாமகவில் இருந்து ஜிகே மணியை நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சி களங்கம் ஏற்படுத்தியதாகவும், இது குறித்து கடந்த 18ஆம் தேதி விளக்கம் கேட்டு உரிய நோட்டீஸ் வழங்கியும், ஜிகே மணி விளக்கம் தரவில்லை என்பதால் கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.

