திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊத்துக்குளி தாலுகா முரட்டு பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளியம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட பாறை குழியில் இன்று மாநகராட்சி 10க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பை கொட்ட வந்ததால் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்குளி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட வரை கைது செய்தனர். தகவல் அறிந்த அதிமுக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மேலும் குப்பை கொண்டுவந்த லாரிகளை சிறை பிடித்து சம்பவ பொதுமக்களுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் பெருந்துறை அதிமுக பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பகுதியில் குப்பை கொட்ட மாட்டோம் என அதிகாரிகள்,மாநகராட்சி காவல்துறை அதிகாரிகள் முன்கூட்டியே கடிதம் தந்துள்ளது. தற்போது இந்த பகுதியில் கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் காலை கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.பேச்சுவார்த்தைக்கு பிறகு அங்கு வந்திருந்த குப்பை லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டது

