பெருந்தலைவர் காமராஜர் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு youtuber முக்தார் இழிவாக பேசியதை கண்டித்து பல்வேறு நாடார் இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
கோவையில் தொழில் முனைவர் பாதுகாப்பு சங்கம், இந்து நாடார் சேவைகள் சங்கம் மற்றும் கோவை மாநகர் வணிகர்கள் சங்கம் சார்பில் கடந்த டிசம்பர் 3-ம் தேதி அன்று Youtuber முக்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் தற்பொழுது வரை அவர் மீது காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு விசாரணை கூட தொடங்கவில்லை என்று மனிதர்கள் குற்றம் சாட்டினர்.
Youtuber முக்தார் நடவடிக்கை எடுக்க விட்டல் தமிழகம் முழுதும் உள்ள 50 லட்சத்துக்கு மேற்பட்ட வணிகர்கள் அரசுக்கு எதிராக செயல்பட போவதாகவும் தினசரி வணிகர்கள் பொதுமக்களிடம் விமர்சனம் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு முத்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

