திருப்பூர் – அனுப்பர்பாளையத்தில் நூற்றுக்கணக்கான பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபநாட்களாக பாத்திரப் பட்டறைக்குள் மற்றும் அதுதொடர்பான தொழிற்சாலைக்குள் கும்பலாக வரும் சில பெண்கள் அங்குள்ளவர்களுடன் தண்ணீர் கேட்பது போல அடாவடியாக நுழைந்து அங்கிருக்கும் பொருட்களை திருடி சென்று விடுகின்றனர்.
இதே போல சில பாத்திரப் பட்டறைகளில் ஆளில்லாத நேரமாக அங்கு சென்று பொருட்களை திருடி சென்று விடுகின்றனர்.
இந்த அடாவடி திருட்டு சம்பவங்கள் காரணமாக பாத்திர பட்டறை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இப்பெண்களால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்டிகளுடன் 15வேலம்பாளையம் போலீசில் புகாரளித்துள்ள பாத்திரப்பட்டறை உரிமையாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

