தமிழ் சினிமாவை விஜயகாந்த் இல்லாமல் தவிர்த்து விட முடியாது. உதவி கேட்டு வந்தவர்களுக்கு உள்ளங்கையில் வைத்து பார்த்தவர். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கால் பதித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்.
கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்தது தமிழகம் மட்டுமல்லாமல், உலகில் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பல நடிகர்கள் வளர வேண்டும் என்பதற்காக அவர்களது படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தியவர். சம்பளம் கூட வாங்காமல் பல படங்களில் கெஸ்ட் ரோலில் பணியாற்றியுள்ளார்.
விஜய், சூர்யா என பல நட்சத்திரங்கள் சினிமாவில் உயர வர வேண்டும் என படத்தில் நடித்து உதவி செய்தவர். இப்படி பல உதவிகளை செய்து வந்த விஜயகாந்த் போல இருக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசும் போது, அரசியலுக்கு நடிகர்கள் வருவது பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான். ஆனால் நடிகர்கள் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என விஜயகாந்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கலைஞர் கருணாநிதியுடன் சேர்ந்து வளர்ந்தவர். உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று எப்போதும் கூறியது இல்லை. அவரை மாதிரி கேஷுவலாக இருக்க வேண்டும் என கஸ்தூரி கூறியுள்ளார். இது மறைமுகமாக விஜய்க்கு அட்வைஸ் செய்வது போல உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

