Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு.. தமிழிசை தடாலடி..!!
    தமிழ்நாடு

    பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு.. தமிழிசை தடாலடி..!!

    Prime ReporterBy Prime ReporterDecember 19, 2025Updated:February 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    It is wrong to praise the Bible and oppose the Bhagavad Gita
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது: கோவை, திருப்பூர் நகரங்களின் அடையாளம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது சிலர் புதிதாக “மஞ்சள் நகரம்” என்று கூறுகிறார்கள். பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போராட்டத்தில் பூரண சந்திரன் தனது உடலில் தீயை ஏற்றிக் கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். துப்புரவு தொழிலாளர்களை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சனை அல்ல; அது ஈகோ பிரச்சனை.

    இந்த விவகாரத்தில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது தவறான போக்கு. திருப்பரங்குன்றம் தூண் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக சிலர் பேசுகிறார்கள்; அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து பெண்ணாக நான் பேச முடியாது.

    2026ஆம் ஆண்டு ஸ்டாலின் அரசு மக்கள் முன் பதில் சொல்லியே ஆக வேண்டும். “மஞ்சள் நகரம்” என்ற கருத்தை நடிகர் விஜய் முன்வைத்துள்ளார்; ஆனால் மஞ்சளுக்கான வாரியத்தை அமைத்தது மத்திய அரசு. மஞ்சள் நகரத்தில் உள்ள மக்கள் பா.ஜ.க-க்கு வாக்களிக்க வேண்டும்.

    விஜய் 10 வயதிலிருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினால், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவை செய்துள்ள எங்களுக்கு எந்த அளவிற்கு மக்களுடன் தொடர்பு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    தி.மு.க மகாத்மா காந்தியை உரிய முறையில் கொண்டாடவில்லை. அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. மகாத்மா காந்தி ஊழல் அற்றவர்; ஆனால் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்தது தமிழ்நாட்டில்தான். காந்திக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரை மாற்றி, அவை பிற்போக்கு இயக்கங்கள் என சொல்ல வேண்டும். சரஸ்வதி நாகரிகம் வரலாற்றில் உள்ளது. அ.தி.மு.க அமைச்சர்கள் பா.ஜ.க தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளமே; அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

    குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. தேர்தல் நேரம் என்பதால் வழக்குகள் போடப்படவில்லை என்றாலும், அவை எப்போதும் தொடரும். உதயநிதிக்கு புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை; எழுதித் தருபவர்கள் எதுகை, மோனையுடன் எழுதித் தருகிறார்கள்.

    கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைத்துள்ளனர்; சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாம். “தீயசக்தி தி.மு.க” என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை. நான் அனைத்து மதங்களுக்கும் ஆதரவாக பேசுவேன்; ஆனால் பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு என அவர் தெரிவித்தார்.

    CM Stalin Coimbatore Coimbatore News DMK Politics Tamilisai கோவை திமுக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026

    திமுக அரசின் ஊழல்.. பாஜக வெளியிட்ட கருப்பு மற்றும் வெள்ளை அறிக்கை!

    April 4, 2026

    பேட்டி கொடுக்கும் விஜய்.. அதுவும் அந்த சேனலுக்கு… சவாலுக்கு காத்திருக்கும் சன் டிவி!

    April 4, 2026

    உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் கேளுங்க.. முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி!

    April 4, 2026

    மாணவன் வீடியோவை பார்த்தால் மனம் வலிக்கிறது.. இதுதான் திமுகவின் சாதனையா? அன்புமணி அட்டாக்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    தங்கையை எதிர்க்க தவெகவுக்கு தாவும் அண்ணன்.. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக பிரமுகர் மகன்!

    March 25, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.