பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை நிதி அகர்வால். இவர் சிம்பு உடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். பின்னர் உதயநிதியுடன் கலகத் தலைவன் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தது.
தற்போது பிரபாஸ் உடன் ராஜாசாப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், நிதி அகர்வால், தமன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு தடுப்புகளை மீறி ரசிகர்கள் அளவுகடந்து குவிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
What a shame ! pic.twitter.com/cnzkMfZkaB
— Prashanth Rangaswamy (@itisprashanth) December 17, 2025
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த நிதி அகர்வாலை ரசிகர்கள் வளைத்துவிட்டனர். சிலர் நிதி அகர்வாலிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இதனால் நடிகை நிதி அதிர்ச்சிக்குள்ளானார்.
பின்பு பவுன்சர்கள் உதவியுடன் எப்படியோ தப்பித்தோம் என காரில் ஏறி புறப்பட்டார். கோபத்துடன் அவர் அங்கிருந்து வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

